IMF, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வருகிறது.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும், அதனாலேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வருகை தரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது கொள்கை தொகுப்பினையும் சர்வதேச நாணய நிதியம் எடுத்துவரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நாடாத்தி கடன் மீள் செலுத்துகை திட்டங்களை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான திட்டங்களை நிறைவு செய்துவிட்டால் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version