திருகோணமலை விபத்தில் மூவர் பலி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியில் இன்று (20.06) காலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் கலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக பெண்களடிங்கிய குழுவொன்று உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று விழுந்ததாகவும் இதன் போது மூவர் உயிரெழுந்துள்ள நிலையில் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை விபத்தில் மூவர் பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version