பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளுக்கான பட்டியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அரசாங்கத்தில் நியமிக்கப்படவேண்டிய அமைச்சர்களது பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக மௌபிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பெரமுனவின் பொது செயலாளர் சாகல காரியவசம் இந்த பெயர் பட்டியலை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தவர்களது பெயர்களே வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேயகுணவர்தன, சி.பி ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, S. M. சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, சனத் நிஷாந்த ஆகியோரே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்றுவது தமது கடமையெனவும் சாகல காரியவசம் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version