முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பிலும், அவருக்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினை சந்தித்த வேளையில், முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.
கடந்த மாதம் இலங்கையில் மக்கள் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்திய நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, மாலைதீவினூடாக சிங்கப்பூர் சென்று, தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். இம்மாதம் 24 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அது தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது.