மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணம், மண்ணெண்ணெயை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை கட்டாயமாக உறுதிப்படுத்தும் படி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன், மின்சக்தி மற்றும் வலுசக்தி கஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளார் என வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.