-அகல்யா டேவிட்-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு- செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு நேற்று (26.09.2021) தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது
உதவிப் பங்குத்தந்தை றோயல் பெணாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்வில் சுமார் அறுபது பேர் ஒற்றுமையுடன் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இரத்த தானம் செய்ததாக தேவாலயத்தின் நிருவாகச் செயலாளர் மைக்கல் ரூபகீர்த்தி தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய கொரோனா காலத்திலும் தங்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தவண்ணம் ஏனையவர்களிற்கு உதவும் நோக்கில் இவ்வாறான இரத்ததான நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை பாராட்டத்தக்கதாகும் என மட்டக்களப்பு சுகாதர துறையினர் தெரிவித்தனர்.
