ஜனாதிபதி- பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று (24.08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன்
பின்னர் மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது நினைவு பரிசுகளும்
பரிமாறிக் கொள்ளப்பட்டன எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version