வெலிக்கடை சிறையிலிருந்து வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் இன்று(26.08) பிற்பகல் இரண்டு மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவரை வெளியே அழைத்த வந்த வேளையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிறைச்சாலை வாசலில் ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்திருந்த நிலையில், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும் கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். .

நேற்றைய தினம் கடிதம் மூலமாக நீதிமன்றத்திடம், நீதி துறையிடமும் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோரியிருந்தார். இன்று அல்லது திங்கட்கிழமை ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நேற்று கூறியிலிருந்த நிலையில், இன்று ஜனாதிபதி மன்னிப்பு கடிதத்தில் கையையொப்பமிட்டதனை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version