ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம் மற்றும் காபூலில் உள்ள சிகையலங்கார நிலையங்களில் தாடியை ஷேவ் செய்யவோ அல்லது வெட்டவோ கூடாது என தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தம்மால் கட்டளையிடப்படும் உத்தரவுகளை மீறும் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என தலிபான்களால் நிறுவப்பட்டுள்ள மத காவல்துறை எச்சரிப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தலிபான்கள் கடுமையான தண்டனைகளை அமுல்ப்படுத்தி வருகின்றன.
மேலும், 1996 தொடக்கம் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலும் இவ்வாறான ஆடம்பரமான சிகை அலங்காரங்களை தடை செய்து ஆண்கள் கட்டாயமாக தாடிவளர்க்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டது.
அந்நிலையில் தற்போது இஸ்லாமிய மதக் கோட்பாட்டிற்கமைய முகசவரம் செய்தலோ தாடியை வெட்டுவதோ தண்டனைக்குரிய குற்றமாக சிகையலங்கார நிபுணர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.