பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரித்து செல்வதினால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் மாவுக்கான நிர்ணயமான விலை இல்லை.நிர்ணய விலை இல்லை என்ற காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. தொடர்ந்து பாணின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இன்று வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை தெரிவித்திருந்ததோடு

நாட்டில் கோதுமை மாவின் பற்றாக்குறை காணப்படுகிறது என்பதனால்  தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெற்றுக்கொள்வது  ஆலோசித்துக்கொண்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஒரு கிலோ கோதுமை மா 360 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் பாணின் விலையும் அதிகரிக்கும் சில வெதுப்பக உரிமையாளர்கள் பாணின் விலையை அதிகரிக்கா விட்டாலும் நிறையினை குறைப்பார்கள் எனவும் ப்ரிமா நிறுவனமானது தங்களுக்கு வழங்கக்கூடிய மாவின் அளவை குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும், இவற்றின் காரணமாக பாணின் உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அரிசி மாவினை பாணுடன் கலந்து செய்வதற்கான உத்தியை கையாளவுள்ளதாகவும் அது வெற்றியளிக்கும் பட்சத்தில் அரிசி மாவினை கலந்து பாணை உற்பத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு தடையின்றி பாணை வழங்க முடியும் எனவும்
யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் நேற்று (30.08) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version