அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் நேற்று(28.09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித முடிவுகளும் எடுக்கபபடவில்லை.
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருட்க்ளுக்கான விலையேற்றத்துக்கு அமைச்சரவை உப குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பொருட்களுக்கான விலையையும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.
ஆகவே உடனடியாக பொருட்களின் விலையேற்றத்தை செய்யாமல் இருக்க அரசு முடிவெடுத்துள்ளது என நம்ப தோன்றுகிறது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஏற்கனவே வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரிசியின் விலையேற்றத்துக்கான வாய்ப்புகளுள்ளன. அத்தோடு அரிசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரிசிக்கன கட்டுப்பாட்டு விலையை நீக்காவிட்டால் தாங்கள், அரிசி உற்பத்தியை நிறுத்தப்போவதாக அண்மையில் அரி உற்பத்தியாளர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டி காட்டதக்கது.