ஹைட்ராபாத் ஆறுதல் வெற்றி. இறுகியது ராஜஸ்தான்.

ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சஞ்சு சம்சன் 82(57) ஓட்டங்களையும், யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால் 36(23) ஓட்டங்களையும், மஹிபல் லொர்மோர் 29(28) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணியின் சித்தார்த் கோல் 2 (4-36) விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணியின் ஜேசன் ரோய் 60(42) ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 51(41) ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 21(16) ஓட்டங்களையும் பெற்றனர்,

போட்டியின் நாயகனாக ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டார்

சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி 10 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

நாளை (28/09/2021) பிற்பகல் 3:30 இற்கு டெல்லி கப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

மாலை 7:30 இற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது

வி.பிரவிக்
தரம் -03

ஹைட்ராபாத் ஆறுதல் வெற்றி. இறுகியது ராஜஸ்தான்.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version