-டுபாயிலிருந்து விமல்-
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
ஆரமபம் முதலே இரு அணிகளும் ஒரே மாதிரியான நிலையிலேயே இறுதி வரை சென்றன. விறு விறுப்பான போட்டியில் இலங்கை அணி 03 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது.
இளநகை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதும் முன் மத்திய வரிசை சரியாக துடுப்பாட தவற அழுத்தம் கூடியது. குஷல் மென்டிஸ் தொடர்ந்தும் நிதானம் கலந்து வேகமாக துடுப்பாட இலங்கை அணிக்கு ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
அணி இக்கட்டான நிலையில் காணப்படும் போது களமிறங்கிய அணியின் தலைவர் தஸூன் சாணக்க அதிரடி துடுப்பாட்டத்தை வெளிக்காட்ட இலங்கை அணி மீள ஆரம்பித்தது.
முன்னதாக பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தின் போது விக்கெட்களை தொடர்ந்தும் இலங்கை பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய போதும், பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்தும் ஓட்டங்களை வேகமாக பெற்றனர். இதன் காரணமாக சிறந்த ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்று இலங்கை அணி மீது அழுத்தம் செலுத்தினர்.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெஹதி ஹசன் மிர்ஷா ஆரம்பத்தில் நிகழ்த்திய அதிரடியே பங்காளதேஷ் அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது. பின்னர் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் ஓட்டங்களை பெற அதன் பின்னர் அபிப் ஹொஸைனும் ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுத்தார். மஹமதுல்லா வழமையான பாணியில் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டத்தை மேற்கொண்டார். இறுதியாக மொசதீக் ஹசன் அதிரடியாக அடித்தாட பங்களாதேஷ் அணி 183 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட நுட்பங்களும் இந்த ஓட்டங்களை பெற முக்கியமான காரணமாக அமைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட அசித்த பெர்னாண்டோ தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டினை கைப்பற்றினர். டில்ஷான் மதுசங்க தனது இரண்டாவது போட்டியில் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் மேலதிகமாக விளையாடியிருந்தால் சில வேளை மேலும் அழுத்தம் வழங்கி ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குசல் மென்டிஸ் | பிடி- டஸ்கின் அஹமட் | முஸ்டபய்சூர் ரஹ்மான் | 60 | 37 | 4 | 3 |
| பெத்தும் நிஸ்ஸங்க | பிடி – முஸ்டபய்சூர் ரஹ்மான் | எப்டட் ஹொசைன் | 20 | 19 | 2 | 1 |
| சரித் அசலங்க | பிடி- மஹமுதுல்லா | எப்டட் ஹொசைன் | 01 | 04 | 0 | 0 |
| தனுஷ்க குணதிலக்க | பிடி- டஸ்கின் அஹமட் | எப்டட் ஹொசைன் | 11 | 06 | 2 | 0 |
| பானுக ராஜபக்ச | பிடி- ஷபீர் ரஹ்மான் | டஸ்கின் அஹமட் | 02 | 04 | 0 | 0 |
| தஸூன் ஷானக | பிடி – மொஷதேக் ஹொசைன் | மெஹேதி ஹசன் | 45 | 33 | 3 | 2 |
| வனிந்து ஹசரங்க | பிடி – மொஷதேக் ஹொசைன் | டஸ்கின் அஹமட் | 02 | 03 | 0 | 1 |
| சாமிக்க கருணாரட்ன | Run Out | 16 | 10 | 1 | 0 | |
| மஹீஷ் தீக்ஷன | 01 | 02 | 0 | 0 | ||
| அசித்த பெர்னாண்டோ | 10 | 03 | 2 | 0 | ||
| உதிரிகள் | 14 | |||||
| வெற்றி இலக்கு | 184 | |||||
| ஓவர் 19.2 | விக்கெட் 07 | மொத்தம் | 184 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| முஸ்டபய்சூர் ரஹ்மான் | 04 | 00 | 32 | 01 |
| டஸ்கின் அஹமட் | 04 | 00 | 24 | 02 |
| ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 31 | 00 |
| எப்டட் ஹொசைன் | 04 | 00 | 51 | 03 |
| மெஹேதி ஹசன் | 02.2 | 00 | 23 | 01 |
| மெஹேதி ஹசன் மிர்ஸா | 01 | 00 | 11 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| மெஹேதி ஹசன் மிர்ஸா | BOWLED | வனிந்து ஹசரங்க | 35 | 26 | 2 | 2 |
| ஷபீர் ரஹ்மான் | பிடி – குசல் மென்டிஸ் | அசித்த பெர்னாண்டோ | 05 | 06 | 1 | 0 |
| ஷகிப் அல் ஹசன் | BOWLED | மஹீஷ் தீக்ஷன | 24 | 22 | 3 | 0 |
| முஷ்பிகுர் ரஹீம் | பிடி – குசல் மென்டிஸ் | சாமிக்க கருணாரட்ன | 04 | 05 | 0 | 0 |
| அபிஃப் ஹொசைன் | பிடி – வனிந்து ஹசரங்க | டில்ஷான் மதுசங்க | 39 | 22 | 4 | 2 |
| மஹமுதுல்லா | பிடி – சாமிக்க கருணாரட்ன | வனிந்து ஹசரங்க | 27 | 22 | 1 | 1 |
| மொசதீக் ஹொசைன் | 24 | 17 | 4 | 0 | ||
| மெஹதி ஹசன் | L.B.W | சாமிக்க கருணாரட்ன | 01 | 02 | 0 | 0 |
| டஸ்கின் அஹமட் | 11 | 06 | 0 | 1 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 183 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டில்ஷான் மதுசங்க | 04 | 00 | 26 | 01 |
| மஹீஷ் தீக்ஷன | 04 | 00 | 23 | 01 |
| அசித்த பெர்னாண்டோ | 04 | 00 | 51 | 01 |
| வனிந்து ஹசரங்க | 04 | 00 | 41 | 02 |
| சாமிக்க கருணாரட்ன | 04 | 00 | 32 | 02 |