இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கில ஊடகமொன்று கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகா ஒருவரை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மக்கள் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர், தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்சமயம் தாய்லாந்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளவர் அங்கு வெளியே செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறார். இவ்வாறான நிலையில் நாட்டுக்கு திரும்புவதறகான ஏற்பாடுகளை செய்து வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை முன் வைத்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே நாளை சனிக்கிழமை நாடு திரும்புகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.