இந்தியாவுக்கு துரதியடித்த இலங்கை

-டுபாயிலிருந்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முக்கியமான இரண்டாம் சுற்று போட்டியில் இலங்கை, இந்தியா அணியினை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி மிகவும் விறு விறுப்பையும் பரபரப்பையும் வழங்கியிருந்தது.

இந்த வெற்றியின் மூலம் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா அணி இலகுவாக வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்பட போதும் இலங்கை அணி நிலைமையினை தலைகீழாக மாற்றியது. இந்தியா அணிக்கம்னா இறுதிப் போட்டி வாய்ப்பு இலையெனும் அளவுக்கு குறைந்துள்ளது.

ஐக்கிய அரபு இராட்சியம் டுபாயில் நடைபெற்ற போட்டியில் நாணய சுற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 175 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

சிறப்பான ஆரம்பம் ஒன்றை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக் கொடுத்தனர். பத்தும் நிசங்க சிறப்பாக நுட்பமாக துடுப்பாடி நல்ல ஆரம்பத்தை வழங்கினார். குஷல் மென்டிஸ், நிசங்க வழங்கிய ஆரம்பம் இலங்கை அணிக்கு நம்பிக்கையினை வழங்கியது. இருவரும் மிகவும் நுட்பமாக துடுப்பாடினார்கள். சிறப்பான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டனர். தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக நிசங்க ஆட்டமிழக்க 97 ஓட்டங்களோடு இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை அணி மீது அழுத்தம் ஆரம்பித்தது. 13 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

இவ்வாறான நிலையில் பானுக்க ராஜபக்ஷ நிதானமாகவும், தேவையான நேரத்தில் அடித்தும் மீண்டும் இலங்கைக்கு அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். தலைவர் சானுக்க, பானுக்க ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கையினை வழங்கியது. இலங்கை அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றனர். 50 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றனர்.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியினை தடுமாற வைத்தனர். யுஸ்வேந்திரா ஷஹால் போட்டியின் போக்கை மாற்றி இந்தியா பக்கமாக வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். மூன்று விக்கெட்களை அவர் கைப்பற்றினார். அஷ்வினும் 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.

பத்தும் நிசங்க தனது ஆறாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். குஷல் மென்டிஸ் எட்டாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

முன்னதாக இந்தியாவின் ஆரம்ப விக்கெட்கள் இரண்டினை வேகமாக இலங்கை அணியினர் கைப்பற்றி இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தனர். அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக ஆரம்பித்து அதிரடியாக துடுப்பாடினர். 97 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். சொற்ப வேளையில் யாதவும் ஆட்டமிழக்க இந்தியா அணி மீது அழுத்தம் ஏற்பட்டது. கார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட் ஆகியோர் மெதுவான துடுப்பாட்டத்துடன் ஆரம்பித்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். இலங்கை அணியின் தலைவர் அதனை முறியடித்தார். 2 விக்கெட்களையும் அவர் கைப்பற்றினார்.

இறுதி நேரத்தில் இந்தியா அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழத்தப்பட இந்தியா அணியின் ஓட்ட எண்னிக்கை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது. இதுவே இலங்கை அணி போராட முக்கியமான காரணமாக அமைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சு மோசமாக அமையவில்லை. ஆனாலும் அச்சுறுத்தும் வகையில் அமையவில்லை. வனிந்து ஹசரங்க விக்ட்களை கைப்பற்ற முடியவில்லை. டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். சாமிக்க கருணாரட்ன அதிக ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக பந்துவீசி 02 விக்கெட்களை கைப்பற்றினார். களத்தடுப்பில் பத்தும் நிசங்க மூன்று பிடிகளை பிடித்தார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – ரோகித் சர்மாயுஸ்வேந்திர செஹால்523742
குசல் மென்டிஸ்L.B.Wயுஸ்வேந்திர செஹால்573743
சரித் அசலங்கபிடி – சூர்யகுமார் யாதவ்யுஸ்வேந்திர செஹால்000300
தனுஷ்க குணதிலக்கபிடி – லோகேஷ் ராகுல்ரவிச்சந்திரன் அஷ்வின்  010700
பானுக ராஜபக்ச  251702
தஸூன்  ஷானக  331841
வனிந்து ஹசரங்க      
சாமிக்க கருணாரட்ன      
மஹீஷ் தீக்ஷன      
அசித்த பெர்னாண்டோ      
       
உதிரிகள்  06   
வெற்றி இலக்கு  174   
ஓவர்  19.4விக்கெட்  04மொத்தம்174   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்04003000
அர்ஷ்தீப் சிங் 03.4003500
ஹார்டிக் பாண்ட்யா04003500
யுஸ்வேந்திர செஹால்04003403
ரவிச்சந்திரன் அஷ்வின்  04003201
     
     

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லோகேஷ் ராகுல்L.B.Wமஹீஷ் தீக்ஷன060711
ரோகித் சர்மாபிடி- பத்தும் நிஸ்ஸங்கசாமிக்க கருணாரட்ன724154
விராட் கோலிBOWLEDடில்ஷான் மதுசங்க000400
சூர்யகுமார் யாதவ்பிடி- மஹீஷ் தீக்ஷனதஸூன்  ஷானக342911
ஹார்டிக் பாண்ட்யாபிடி- பத்தும் நிஸ்ஸங்கதஸூன்  ஷானக171301
ரிஷாப் பான்ட்பிடி- பத்தும் நிஸ்ஸங்கடில்ஷான் மதுசங்க171330
தீபக் கூடாBowledடில்ஷான் மதுசங்க030400
ரவிச்சந்திரன் அஷ்வின்    150801
புவனேஷ்வர் குமார்Bowledசாமிக்க கருணாரட்ன000200
அர்ஷ்தீப் சிங்       
       
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்173   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க04002403
மஹீஷ் தீக்ஷன04002901
சாமிக்க கருணாரட்ன04002702
அசித்த பெர்னாண்டோ02002800
வனிந்து ஹசரங்க04003900
தஸூன்  ஷானக02002602
     

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version