நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட குறைந்த செலவுடன் 75ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான,விஷேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டு குழுவின் கூட்டம் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் பல செயல்திட்டங்களுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் சுதந்திர தினத்துடன் இணைந்ததாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேலியகொட,தெமட்டகொட,மொரட்டுவ,மஹரகம மற்றும் கொட்டாவ பிரதேசங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட உள்ளன.