திலீபனின் 35 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்தது.

அகிம்சை வழி போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர் திலீபனின் 35 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பித்ததுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம்(15.09) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் முல்லாவுத்தீவு மாவட்டங்களில் தீபமேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version