20-20 உலக கிண்ண தொடரில் மஹேல

உலக கிண்ண 20-20 தொடரில் இலங்கை அணியோடு இலங்கை அணியின் நுட்பவியல் ஆலோசக பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன இணையவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் தலைவர் சம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று(15.09) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இம்மாதம் 25 ஆம் திகதி கண்டியில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த சம்மி சில்வா, இலங்கை அணி 02 ஆம் திகதி உலக கிண்ண தொடருக்காக இலங்கையிலிருந்து பயணமாகவுள்ளதாகவும், 06 ஆம் திகதி மஹேல ஜயவர்தன அணியோடு இணைவார் எனவும் மேலும் தெரிவித்த சம்மி சில்வா, உலக கிண்ணம் நிறைவடையும் வரை அவர் அணியோடு தொடர்ந்தும் இணைந்திருப்பார் எனவும் கூறினார்.

மஹேல ஜெயவர்தனவின் செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை தேசிய அணியிலும், இலங்கையின் கனிஸ்ட மட்டத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட்டுக்கு மஹேல ஜயவர்தன மறைமுகமாக பாரிய பங்காற்றி வருவதாகவும் புகழாரம் சூடினார்.

இலங்கை தெரிவுக்குழுவோடும், இலங்கை அணிகளது கனிஷ்ட பயிற்றுவிப்பாளர்களுடனும் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகளே அண்மைக்கால முன்னேற்றங்களுக்கு பாரியளவில் கைகொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version