கொழும்பின் சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, கொழும்பு உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், கடற்படை, விமான படை, பொலிஸ் தலைமையகங்கள், அக்குரோகொட இராணுவ தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், முப்படை தளபதிகளது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆகிய பகுதிகள் இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் தேவையற்ற நடமாட்டம் அடங்கலாக பல விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள வர்த்தமானியினை வாசித்து குறித்த பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.