கொழும்பு 4 இல் அமைந்துள்ள இந்து கல்லூரிக்கு இன்று காலை (01.10) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றைய சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகுமார், S.M மரிக்கார், ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவர் லக்ஷயன் முத்துக்குமார சுவாமி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்துக்கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், முன்னாள் அதிபார்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை வாயில் வரை பேரூந்தை ஒட்டி வந்த சஜித் பிரேமதாசா, பாடசாலை வித்தியா விநாயகர் ஆலயத்தின் பூசைகளை தொடர்ந்து மீண்டும் ஒட்டி சென்று மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் கையளித்தார். மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் தமக்கான பேரூந்தினை வரவேற்றனர்.
நடன மற்றும் காலை நிகழ்வுகளோடு சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக பாடசலை மைதானத்தில் நடைபெற்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 35வது பஸ் என்பது விசேடம்சமாகும்.
