இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் எரிபொருள் தயாரிப்பு ஒயில் விலை குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிட்ட கொள்வனவு விலை சூத்தரத்தின் அடிப்படையில் பெற்றோலுக்கு அதிக இலாபம் கிடைக்கின்றமை தெளிவாகியிருந்தது. இவ்வாறான நிலையில் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலையினை இன்று நள்ளிரவு முதல் தாமும் குறைப்பதாக அறிவித்துள்ளது.
92 ரக பெற்றோல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு 410 ரூபாவாகவும், 95 ராக பெற்றோல் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை.