சுற்றுலா பயணிகளுக்கான விசேட எரிபொருள் பாஸ்

சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான மீள் நிரப்புகை அட்டை(Prepaid Card) இனை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். டொலர் மூலமாக பணம் செலுத்தி விமான நிலைய டயலொக் நிறுவனம் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றில் பயணிகள் இந்த அட்டையினை வாங்கி கொள்ள முடியும்.

மீள் நிரப்புகையினை சம்பத் வங்கி கிளைகளில் நாடெங்கிலும் செய்ய முடியும். நாட்டிலுள்ள 300 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபான நிரப்பு நிலையங்கள் மற்றும் நாடு பூராகவுமுள்ள லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப முடியும்.

சுற்றுலா துறை அமைச்சு இந்த நடவடிக்கைளை முழுமையாக செயற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய டயலொக் நிறுவனம், சம்பத் வங்கி, மத்திய வங்கி, மிலேனியம் IT ESP, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபானம், ஐ.ஓ.சி ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version