ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ

மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடியாதெனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஒரு இலட்சம் ரூபாவினை வருமானமாக பெறும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கோப்பு உருவாக்கப்பட வேண்டும். அது வரவேற்கப்படவேண்டிய விடயம். ஆனால் எங்கே பிழை விடுகின்றார் என்றால், தற்போது 1 இலட்சம் என்பது பெரிய வருமானம் இல்லை என்பதனை ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 5 இலட்சம் ரூபா வருமானத்தை பெறுபவர்களுக்கு வரி அறவிடலாம் என்ற கலந்துரையாடலை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையினை முன்வைக்க விரும்புகிறேன் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் துன்பத்தில் இருக்கும் இவ்வாறான நிலையில் அவர்களை ,மேலும் கசக்கி பிழியாமல் ராஜபக்ஷ அணியினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தை தேடி நாட்டுக்கு மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென அவர் மேலும் அறிவுரை வழங்கியுள்ளார்.

52 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர். இது தெரிந்த கடன். அதை விட தெரியாத கடன், உள்நாட்டு கடன் என பல கடன்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன என கேள்வியெழுப்பிய அதேவேளை, அவர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்ற பணம் உகண்டாவிலா, சிங்கப்பூரிலா, ஐரோப்பாவிலா, டுபாயிலா இருக்கிறது என்பதனை தேடவேண்டும். அதனை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனை தேட வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருக்கின்றது”.

“அந்தப் பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமெனவும் அதன் மூலம் இலங்கையின் கடன்களை கட்ட வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டுமெனவும் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன் வைப்பதாக மனோ மேலும் தெரிவித்தார்.

“ஆனால் ரணில் அவ்வாறு செய்ய மாட்டார். ஏனெனில் ரணில் நடிகர் மட்டுமே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாமே ராஜபக்ஷ நிறுவனமே என மேலும் அவர் கூறியுள்ளார். ஆகவே ரணில் விக்ரமசிங்க தனக்கு இயலாத வேலையினை செய்ய வர கூடாது. இந்த அரசாங்கத்தை, பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது. ஆகவேதான் உடனடியாக பாரளுமன்ற தேர்தலை நடாத்தி புதிய மக்களானை மூலம் கொள்ளைகளை கண்டுபிடித்து, வெளிநாட்டுக்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொன்டு வர முடியுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்துளளார்.

வீடியோ இணைப்பு

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version