வெடுக்குநாறி ஆலய வழக்கு – நிர்வாகத்தினர் விடுதலை

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று(14.10) குறித்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் தம்பிராசா மதிமுகராசா,
மற்றும் நிர்வாகத்தினர்களான தமிழ்செல்வன், சசி ஆகியோர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பாகநெடுங்கேணி பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதவானால் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version