சீன தூதுவர் குயி ஷென்ஹோங் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று(14.10) சந்திப்பு ஒன்று இடமபெற்றுள்ளது. இரு நாடுகளது உறவு தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை தற்போதைய கடினமான நிலையிலிருந்து விரைவில் வெளியே வருமென தான் நம்புவதாகவும் அதற்கு சீனா உறு துணையாக இருக்குமெனவும் சீன தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் சீனாவுக்கான விஜயங்களை இலங்கையர்கள் மேற்கொள்வதிலும், இலங்கைக்கு சீனர்கள் வருகை தருவது தொடர்பிலுமான சிக்கல் நிலைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சீன தூதுவருக்கு விளக்கிய நிலையில், மாணவர்கள் மற்றும் வியாபரங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பயண தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் கொரோனா தளர்வுகள் ஏற்படுத்தும் போது மேலும் பயண தளர்வு ஏற்படுமெனவும் சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சீனா கொமியுனிஸ்ட் கட்சியின் 20 ஆவது தேசிய மாநாட்டுக்கு சீனா ஜனாதிபதியான ஷி ஜின்பிங் இற்கு வாழ்த்து கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ சீன தூதுவரிடம் கையளித்தார்.