ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் இன்று.

ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாள் இன்று. இன்று முதல் சுற்றுப் போட்டியான தெரிவுகாண் போட்டிகள் இரண்டு நடைபெறவுள்ளன. முதற் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்கொட்லாந்த்து அணிகள் மோதுகின்றன.

அவுஸ்திரேலியா ஜீலோங்கில் ஆரம்பித்துள்ள இரு அணிகளுக்குமான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாய்ப்பான போட்டியாக இந்த போட்டி கருதப்படுகிறது.

அணி விபரம்

ஸ்கொட்லாந்து

ஜோர்ஜ் மன்சே, மிக்கேல் ஜோன்ஸ், மத்தியூ க்ரூஸ், ரிச்சி பெரிங்க்டன், கலம் மக்லீட், க்றிஸ் கிரேவ்ஸ், மிக்கேல் லீஸ்க், மார்க் வோல்ட், ஜோஸ் டெவி, ஷப்யான் ஷரீப், பிரட் வீல்

மேற்கிந்திய தீவுகள்

கைல் மயேர்ஸ், எவின் லெவிஸ், ப்ரண்டன் கிங், சமார் ப்ரூக்ஸ், நிக்ளோஸ் பூரான், ரொவ்மான் பவல், ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அகீல் ஹொசைன், அல்ஷாரி ஜோசப், ஒபேட் மக்கொய்

பிற்பகல் போட்டியாக அயர்லாந்து மற்றும் சிம்பாவே அணிகளிக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இன்று இரண்டு நான்கு பயிற்சி போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை வேளையில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியும், நியூஸிலாந்து தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.

1.30 இற்கு பாகிஸ்தான், இங்கிலாந்த்து அணிகளுக்கிடையிலான போட்டியும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.

போட்டி முன்னோட்டம்

T 20 உலக கிண்ண இரண்டாம் நாள்.  மேற்கிந்திய தீவுகள் Vs ஸ்கொட்லாந்து சிம்பாவே Vs அயர்லாந்து. V Media
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version