தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலரிங்கு… பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகி இருந்த இவர் பின்னர் மின்சாரக்கனவு திரைப்படத்தில் பாடிய அன்பென்ற மழையிலே பாடல் மூலம் தன் குரலுக்கென்ற தனி அங்கீகாரத்தினையும், இரசிகர்களையும் உருவாக்கிக்கொண்டார் பாடகி அனுராதாஸ்ரீராம்.
பாடகியாக மட்டுமல்லாது இவர் டப்பிங் ஆட்டிஸ்ட்டாகவும், பாடகர்களைத் தேர்வுசெய்யும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடமையாற்றி தற்போது அந்த நிகழ்ச்சி நிறைவடைந்துளள நிலையில் அனுராதாஸ்ரீராம் திருவண்ணாமலை நீர்த்துளிகள் இயக்கம் எனும் சமூக அமைப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அப் புகைப்படத்தில் எவ்வித மேக்கப்பும் இல்லாது எளிமையாக மரநடுகையில் ஈடுபட்டுள்ள அவர் குறித்த பணியில் தன்னை இணைத்துக்கொண்ட குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.