புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்

புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர் மட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த கட்ச்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்திரா வன்னியாராச்சி, C.B இரத்நாயக்க, S.M. சந்திரசேன ஆகியோரை நியமிக்குமாறு கோரியிருந்தது.

இந்த மூவரோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் துமிந்த திஸ்ஸாநாயக்க ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரத்துக்குள் அமைச்சரவைக்கு 30 அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version