முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு

ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே இவ்வாறு சமூக பணிகளில் ஈடுபடுகின்றனர்

கொரோனா காலத்தில் வவுனியாவில் பல பிரதேசங்களுக்கும், பல்லின மக்களுக்கும் ஓடி, ஓடி நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட இளைய மதகுரு கணேஸ் குருக்கள். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முனைப்போடு அவர் செயற்படுவதனை அவதானிக்க முடிந்தது.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் சாளம்பைகுளம் கிராமத்தை சேர்நத இஸ்லாமிய குடும்பங்களுக்கு 40 நிவாரணபொதிகளை, கொடையாளர்கள் மூலம் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவை நல்ல மதகுருவுக்கான எடுத்துக்காட்டுக்கள். ஒருமைப்பாடு ஏற்படவேண்டிய இடம் வழிபாட்டு தலங்களே. அதனை செயற்படுத்த வேண்டியவர்கள் மத குருக்களே.

கணேஷ் குருக்கள் சமூக சேவைகளை செய்வதோடு, இயற்கையினை பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும், அவற்றை பாதுகாப்திலும் சிறப்பாக செயற்படும் ஒருவர். குறிப்பக அரியவகை மரங்களை பராமரிப்பதிலும், மற்றையவர்களுக்கு வழங்குவதிலும், மற்றையவர்களை மரங்களை நட வைப்பதிலும் முன்னின்று செயற்படும் ஒருவர்.

சமுதாயம் சார்ந்த கருத்துக்களை, அக்கறையினை கொண்டவரும், நல்ல சமுதாய கருத்துகளை மக்களுக்கு கூறிவரும் வவுனியா பிள்ளாயார் ஆலய குரு, கணேஸ் குருக்கள் மதகுருமாருக்கு நல்ல முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் செயற்படுகிறார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version