கூட்டெரு உற்பத்திக்கான இயந்தரத்தின் பயன்பாடும் பயிற்சியும்.

-அகல்யா டேவிட்-

கூட்டெரு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரத்தின் செயற்பாடும் அதுதொடர்பான விவசாயிகளுக்குரிய விளக்கப் பயிற்சியும் மட்டக்களப்பு மாவட்டம் மண்டபத்தடி விவசாய விரிவாக்கப் பிரிவிலுள்ள பன்சேனை விவசாப் போதனாசிரியர் பிரிவின் வாழைக்காலை எனும் இடத்தில் 29.09.2021, புதன்கிழமை இடம்பெற்றது.

இவ் இயந்திரங்கள் கிழக்கு மாகாண ஆளுனரின் நிதியொதுக்கீட்டில் விவசாய அமைச்சின் பணிப்பின் கீழ் கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்போது கூட்டெருவுக்குத் தேவையான மூலப் பொருட்களை சிறு சிறு துண்டு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் இயக்கப்பட்டு, அது தொடர்பில் விவசாய அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டன.

பன்சேனை விவசாயப் பிரிவின் விவசாய் போதனாசிரியர் திருமதி சுதர்சனா ஞானப்பிரகாசத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்க மாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம். ஹுசைன், மட்டக்களப்பு மத்தி வலைய விவசாய உதவி விவசாயப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்திஇ மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதி விவசாயிகளால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கூட்டெரு மேடைகளையும் விவசாய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விவசாயத்தில் இயற்கை உரப்பாவனையை மக்களிடையே சாதாரண பாவனைக்குப் பழக்கப்படுத்துவது தற்போது தேவையான ஒரு விடயமாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே இவ்வாறான இலகுவழிகளை அறிமுகப்படுத்தி,பயிற்சிகளை வழங்கி, ஊக்குவிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்வது தேவையான செயன்முறையாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version