வவுனியா ஆலயத்தில் கூடியவர்கள் விரட்டியடிப்பு

வவுனியாவின் நகரத்தின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதர நடைமுறைகளின்றி, அதிகமானவர்கள் ஒன்று கூடி வெள்ளிக்கிழமை மாலை பூசையினை செய்த வேளையில் அங்கே சென்ற சுகாதாரா பிரிவினர் அங்கே ஒன்று கூடியியிருந்தவர்களை உடனடியாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.


வழிபாட்டு தளங்களில் மக்களை ஒன்று கூட்ட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த ஆலயத்தில் பலர் சுகாதர கட்டுப்பாடுகளின்றி கூட்டமாக ஒன்று சேர்ந்து வழிபட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


ஆலயங்களில் மக்களை ஒன்று கூட்ட வேண்டாமென அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதர சேவையின் எந்த வித கடுமையான நடவடிக்கைளுமின்றி அங்கே கூடியிருந்த மக்களை, கடவுளை கும்பிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே செல்லுமாறு பணித்ததனை எமது ஊடகம் நேரிடையாக பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version