இந்தியாவின் கொவிசீல்ட் மற்றும் சீனாவின் கோவக்ஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட நபர்கள் தமது நாட்டிற்கு வரத் தடையென ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட சில நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் அவுஸ்ரேலியா, சீனாவின் கோவக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதியளித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவின் கொவிசீல்ட் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
தமது நாட்டில் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கையின் பொருட்டே இத் தடையை நீக்கியுள்ளதாக அவுஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அவுஸ்ரேலியாவிற்கு வருகை தருபவர்களில் தம்மால் அனுமதிக்கப்பட்டுள்ள பைசர், மடோனா,அஸ்ராசெனிக்கா, கொவக்ஷ் மற்றும் கோவிசீல்ட் தடுப்பூசி இரு டொஷ்களையும் முழுமையாக பெற்றவர்கள் விடுதிகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் எனவும், எனினும் அவர்கள் அனைவரும் போன்று விமான நிலையத்தில் கொவிட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
