பிரான்ஸ் தலைநகரான பரிஸில் உள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த ஆர்ஜென்ரினா கால்பந்து வீரர் லியோ மெஸ்ஸியின் பணம் மற்றும் ஆபரணங்கள் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த ஹோட்டலில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடனும் தங்கிவந்த லியோ மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக விளையாடிவந்த நிலையில் தற்போது பிஎஸ்ஜி அணி வீரராக தன்னை மாற்றம் செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை குறித்த ஹொட்டலில் மெஸ்ஸி உட்பட 4 பேரின் அறைகளில் திருடர்கள் கொள்ளையிட்டுள்ளதாகவும் இதன்போது மெஸ்ஸியின் ஆயிரக்கணக்கான பெறுமதியுடைய யூரோ பணம் மற்றும் மனைவியின் பெறுமதியான நகைகள் என்பன பறிகொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஹொட்டலில் தங்கியுள்ள வேளைகளில் தன்னைப் பார்வையிட வரும் இரசிகர்களை சந்திக்கவென மெஸ்ஸியால் பயன்படுத்தப்பட்டுவந்த பால்கனி வழியாகவே கடந்த புதன்கிழமை இரவு திருடர்கள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடாத்திவரும் பொலிஸ்குழு குறித்த சம்பவத்திற்கு ஹொட்டலின் பாதுகாப்பு போதுமானதாக இருக்காமையே காரணம் எனத் தெரிவித்துள்ளது.
