தனது அண்ணனின் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி

நடிகை ஷாலினி அஜித்குமார் தனது சகோதரனான ரிசாட் நடித்து தற்போது வெளிவந்துள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தனது மகன் ஆத்விக்குடன் சென்று திரையரங்கில் பார்த்துள்ளார்.

நடிகர் ரிசர்ட் நடித்த திரௌபதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அத்திரைப்படத்தை இயக்கிய மோகனின் இயக்கத்திலேயே ருத்ர தாண்டவம் திரைப்படத்தையும் நடித்துள்ளார்.

இயக்குனர் மோகனின் இயக்கத்தில் அமைந்துள்ள சமூக விழிப்புணர்வுத் திரைப்படமான ருத்ரதாண்டவத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன் நடித்துள்ளதுடன் இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துமென பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஷாலினி அஜித்குமார் தனது மகனான ஆத்விக்குடன் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தினை பார்த்ததுடன் படக்குழுவினரையும் வாழ்த்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமாரது குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் தமது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளாத வேளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த அவரது மகனான ஆத்விக்கின் புகைப்படத்தினை அஜித் ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

தனது அண்ணனின் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version