தமிழ் தெலுங்கு என 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நடிகர் நாகசைததன்யா கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அண்மைக்காலங்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட விடயமாக இவர்களது விவாகரத்து இருந்துவந்த நிலையில் நடிகர் நாகசைதன்யா தானும் நடிகை சமந்தாவும் பத்துவருட நண்பர்களாக இருந்து திருமணம் செய்திருந்தோம். எனினும், நாம் இருவரும் இணைந்து வாழமுடியாத நிலையில் விவாகரத்தினை தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளதுடன் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகத்தினரிடம் இந்த நிலைமையில் தமக்கு ஆதரவுதருமாறும், தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கான சுதந்திரத்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் நாகசைதன்யாவின் குடும்ப பெயரை நீக்கியிருந்ததுடன், நடிகரும் மாமானாருமான நாகர்ஜுனாவின் பிறந்த தினத்திற்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியிருந்த நிலையில் தனது மருமகளான சமந்தாவின் பிறந்தநாள் பதிவிற்கு அவர் நன்றி கூறாததும் ஊடகங்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு இருவரும் பிரந்துவிட்டார்கள் எனும் செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.
