கடும் குளிர் காரணமாக இரண்டு குழந்தைகள் மரணம்!

நாட்டில் நிலவிவரும் குளிர் காலநிலை காரணமாகஇரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தளாய் ரஜ எல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவனுமே இவ்வாறு நேற்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு மரணங்களுக்கும் நுரையீரல் கோளாறு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டமையே காரணம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சிறப்பு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version