ஜப்னா கிங்ஸ் மற்றும், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி மூலமாக மிக பலமான ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்றுள்ளது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.
ரஹ்மனுள்ளா குர்பாஸ் மிக அபாரமாக அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தார். அவருக்கு ஏற்ற விதத்தில் அவிஷ்க பெர்னாண்டோவும் இணைப்பாட்டத்தை வழங்கி வேகமாக துடுப்பாடினார். இருவரும் 133 ஓட்டங்களை 64 பந்துகளில் பகிர்ந்தனர். 73 ஓட்டங்களை பெற்ற நிலையில் குர்பாஸ் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வருகை தந்த மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சராசரியாக அதிரடியாக துடுப்பாட யாழ் அணி 200 ஓட்டங்களை இலகுவாக தாண்டியது.
தம்புள்ள அணி சார்பாக எவரையும் பந்துவீச்சில் குறிப்பிட்டு கூற முடியாது. லஹிரு குமார 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவ்ளவு அடிக்கப்பட்டும், இணைப்பாட்டம் முறியடிக்கப்படாத நிலையிலும் தஸூன் சாணக்க தான் 17ஆவது ஓவரிலேயே பந்துவீசினர்.
யாழ் அணி இன்று தமது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. தம்புள்ள அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து ஐந்தாமிடத்தில் காணப்படுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | Bowled | பேபியன் அலன் | 73 | 35 | 7 | 5 |
| அவிஷ்க பெர்னாண்டோ | Bowled | டுஸான் ஹேமந்த | 54 | 30 | 6 | 2 |
| தனஞ்சய டி சில்வா | பிடி -ஷெவான் டானியல் | லஹிரு குமாரா | 19 | 12 | 2 | 1 |
| சதீர சமரவிக்ரம | 38 | 23 | 6 | 0 | ||
| சொஹைப் மலிக் | பிடி – தஸூன் சாணக்க | ப்ரமோட் மதுஷான் | 32 | 15 | 0 | |
| திசர பெரேரா | 12 | 06 | 0 | 1 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 04 | மொத்தம் | 240 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| தரிந்து ரட்நாயக்க | 03 | 00 | 34 | 00 |
| லஹிரு குமாரா | 04 | 00 | 57 | 02 |
| ப்ரமோட் மதுஷான் | 04 | 00 | 54 | 01 |
| சிகான்டர் ரஷா | 04 | 00 | 35 | 00 |
| டுஸான் ஹேமந்த | 04 | 00 | 44 | 01 |
| தஸூன் சாணக்க | 01 | 00 | 13 | 00 |
அணி விபரம்
யாழ் அணி வீரர் விஜயகாந்த் விஜயஸ்காந் முதுகுப்புற உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாளைய போட்டியில் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், டில்ஷான் மதுசங்க, பினுற பெர்னாண்டோ
அணி விபரம்
தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரொம் அப்பெல், ரவிந்து பெர்னாண்டோ, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, தரிந்து ரட்நாயக்க, ப்ரமோட் மதுஷான், டுஸான் ஹேமந்த
