இந்தியாவின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா கெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.
லைக்கா ஹெல்த்தின் நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார்.
பிரேமா சுபாஸ்கரன், ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அணுகுவதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார். 2015 இல் LycaHealth ஐ நிறுவியதுடன் அதன் தலைவராகவும் செயற்படுகிறார்.
அந்த வகையில் வைத்திய துறைசார்ந்த புதிய சந்தைகளில் விரிவாக்கம் மற்றும் மையங்களின் ஒட்டுமொத்த இயக்கம் உட்பட வணிகத்தின் செயற்பாட்டு மற்றும் மூலோபாய வளர்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.
2015 ஆம் ஆண்டில் LycaHealth இன் கனரி வார்ஃப் கிளினிக்கையும், 2016 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் ஹெல்த்கேர் உட்பட உலகெங்கிலும் இரண்டு மையங்களை உருவாக்கி தனது சேவையை தொடர்கிறார்.
பிரேமா சுபாஸ்கரன், 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது உலகெங்கிலும் உள்ள மிகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் சமூகங்களுக்கு, குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக நிறுவப்பட்டது.
Lyca குழுமத்தின் பொது சேவைகள்(CSR) முன்முயற்சிகளுக்கு அவர் தலைமையும் தாங்குகிறார், இதில், அண்மையில், பிரித்தானியாவின் அல்சைமர்ஸ் ஆராய்ச்சியின் முக்கிய பணிகளுக்கான நிதியுதவி, கறுப்பின மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகங்களுக்கு நோய், அதன் அடையாளம் மற்றும் தடுப்பு பற்றிய கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
பிரேமா பயோமெடிக்கல் அறிவியலில் முதுகலைமானிப் பட்டம் பெற்றவர். மனிதாபிமான சேவைகளுக்காக சிறந்த பெண்மணி விருதுகள் (G.O.D) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் குளோபல் அதிகாரிகள் ஆஃப் டிக்னிட்டி விருது (G.O.D) அரசியல், பொது வாழ்க்கை மற்றும் வணிகம் என்பவற்றிற்கான ஆசியாவின் குரல் விருது 2018, மற்றும் மனிதாபிமான சேவைகளுக்கான ஐநாவின் சிறந்த பெண்மணிக்கான விருது 2017 ஆகிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (Winner of the Asian Voice Political and Public Life Business Person of the Year Award 2018 at the House of Commons and Global Officials of Dignity Awards (G.O.D) Distinguished Woman of the Year 2017 at UN for humanitarian services.)