முத்திரை இருந்தால் மட்டும் இறைச்சி வாங்குங்கள்!

தற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், பொது சுகாதார ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் முன்னர் மற்றும் பின்னரான ஆய்வுக்குப் பிறகு பரிசோதனை செய்யப்பட்ட முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் குளிரால் உயிரிழந்ததாக கூறப்படும் விலங்குகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த இரண்டு நாட்களில், நாட்டின் பல நகரங்களில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை நாங்கள் கண்காணித்தோம். அங்கு, பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏதேனும் நோய் தாக்கி இறந்த விலங்கை உணவாக எடுத்துகொல்வது மிகவும் ஆபத்தான நிலை என்பதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும், மேலும் இறந்த நோய் ஒரு தீவிரமான கண்டறியப்படாத நோயாக இருக்கலாம், அது மனித பாவனைக்கு ஒரு போதும் உகந்ததாக இருக்காது.

மேலும், விலங்குகளை உணவுக்காக கொல்பவர்கள் பசு வதை சட்டத்தின்படி விலங்குகளை கொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இறைச்சி வியாபாரிகள் இறந்த விலங்குகளின் உடல்களை இறைச்சிக்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கின்றேன். மேலும் நாட்டின் அனைத்து இடங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தச் சட்டங்களை யாராவது மீறினால், பசு வதைச் சட்டம் மற்றும் உணவுச் சட்டத்தின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version