“கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று(12.12) போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 26 இடங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் பூர்வீக இடங்களாகவுள்ள தொல்லியல் பகுதி என அடையாளப்படுத்தப்பட்ட வேத்துச்சேனை, வெல்லாவெளி கல்லடிப்பிள்ளையார் ஆலயம் ஆகிய இடங்களுக்கு எல்லைக்கற்களை இடுவதற்கான ஆரம்பகட்ட பணியினை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சென்றுள்ளனர்.
“தொல்பொருள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், மற்றும் பிரதேச செயலாளருடன் அங்குள்ள மக்கள் சகிதமாக கலந்துரையாடி அவர்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கலந்துகொண்டிருந்தார். .
“அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் விடயத்தில் மெளனம் காப்பது பல சந்தேகங்களை உண்டுபண்ணுகின்றது” என சாணக்கியன் மேலும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.