போராடக்கூடிய ஓட்ட எண்ணைக்கையினை பெற்றது யாழ் அணி

ஜபப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் தடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி பலமான ஓட்ட எண்னிக்கை ஒன்றை பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

துடுப்படிய யாழ் அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சகல துடுப்பாட்ட வீரர்களும் சராசரியான ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். காலி அணியுடன் அதிரடி நிகழ்த்திய குர்பாஸ் இன்று வேகமாக ஆட்டமிழந்தமை யாழ் அணிக்கு பின்னடைவை வழங்கியது. இருப்பினும் அவிஷ்க பெர்னாண்டோ இன்றும் நல்ல ஆரம்பத்தை வழங்கினார். சதீர சமரவிக்ரம, சொஹைப் மலிக் ஆகியோரது இணைப்பாட்டம் மத்திய வரிசையில் ஓட்டங்களை உயர்த்த உதவியது. அஷான் ரண்டிக்க அதிரடியாக துடுப்பாடிய போதும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் சிறப்பாக பந்துவீசி ஆரம்ப விக்கெட்களை தகர்க்க உதவினார்.

யாழ்ப்பாணம் அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. கொழும்பு அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியினை பெற்றுள்ளது.

அணி விபரம்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், அஷான் ரந்திக, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த விஜயஸ்காந், அசித்த பெர்னாண்டோ

கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, நவோட் பரணவித்தாரன, சரித் அசலங்க, நிஷான் மதுஷ்க, டினேஷ் சந்திமால், பென்னி ஹோவல், டொமினிக் ட்ரேக்ஸ், சீக்குகே பிரசன்ன, கஸூன் ரஜித, நவீன் உல் ஹக்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – , நிரோஷன் டிக்வெல்லபென்னி ஹோவல்171102
அவிஷ்க பெர்னாண்டோபிடி – நவீன் உல் ஹக்நவீன் உல் ஹக்323140
அஷான் ரந்திகபிடி – சரித் அசலங்கநவீன் உல் ஹக்271422
சதீர சமரவிக்ரமBowledடொமினிக் ட்ரேக்ஸ்322530
சொஹைப் மலிக்  352650
திசர பெரேராRun Out 271331
       
       
       
       
       
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்176   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித02001900
நவோட் பரணவித்தாரன02001302
சீக்குகே பிரசன்ன04002401
பென்னி ஹோவல்04003700
நவீன் உல் ஹக்04004401
டொமினிக் ட்ரேக்ஸ்04005301
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version