ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளிக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கண்டி அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை முதலாவது அணியாக பெற்றுள்ளது.
விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளோடு அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. தம்புள்ள அணி 10 புள்ளிகளை பெறும் வாய்ப்பில்லாதமையினால் கண்டி அணி தெரிவாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய யாழ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பம் முதலே விக்கெட்களை தொடர்ந்து இழந்தமையினால் யாழ் அணி வெற்றி பெற முடியாமல் போனது. சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டனர்.
கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் பேபியன் அலன்இறுதி நேரத்தில் நிகழ்த்திய அதிரடி மற்றும் கார்லோஸ் ப்ராத்வைட்டிதின் பந்துவீச்சு கண்டி அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. ஆரம்பத்தில் அன்றே பிளட்சர் அதிரடி நிகழ்த்தினார். பத்தும் நிஸ்ஸங்க நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்டுத்தினார்.
வொக்கார் சலாம்கெஹலி முதல் விக்கட்டை கைப்பற்ற அடுத்த விக்கெட்டினை டுனித் வெல்லாளகே கைப்பற்றினர். இன்று டுனித் வெல்லாளகேயின் பந்துவீச்சு மிக அபாரமாக அமைந்து. ஓட்டங்களை அதிகளவில் வழங்காமல் கட்டுப்படுத்தி, 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இறுதி நேரத்தில் பேபியன் அலன் அதிரடி நிகழ்த்தி கண்டி அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றார். நீண்ட பெரிய ஆறு ஓட்டங்களை அடித்து தாக்கினர். விஜயகாந்த் விஜயஸ்காந் இன்று விக்கெட்களை கைப்பற்ற முடியாமல் போனது. அவரது பந்து வீச்சுக்கும் அலன் அதிரடி நிகழ்த்தினார்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – நஜிபுல்லா ஷர்டான் | இசுரு உதான | 04 | 05 | 1 | 0 |
அவிஷ்க பெர்னாண்டோ | பிடி – அன்றே பிளட்சர் | கார்லோஸ் ப்ராத்வைட் | 33 | 20 | 4 | 1 |
தனஞ்சய டி சில்வா | பிடி – சரித் அசலங்க | நவீன் உல் ஹக் | 00 | 05 | 0 | 0 |
சதீர சமரவிக்ரம | பிடி – வனிந்து ஹஸரங்க | வனிந்து ஹஸரங்க | 48 | 41 | 5 | 0 |
சொஹைப் மலிக் | L.B.W | வனிந்து ஹஸரங்க | 08 | 12 | 0 | 0 |
திசர பெரேரா | பிடி – அன்றே பிளட்சர் | கார்லோஸ் ப்ராத்வைட் | 02 | 05 | 0 | 0 |
டுனித் வெல்லாளகே | பிடி – அன்றே பிளட்சர் | கார்லோஸ் ப்ராத்வைட் | 01 | 02 | 0 | 0 |
ஜேம்ஸ் புல்லர் | பிடி – சாமிக்க கருணாரட்டன | கார்லோஸ் ப்ராத்வைட் | 16 | 12 | 2 | 0 |
விஜயகாந்த விஜயஸ்காந் | 10 | 08 | 0 | 0 | ||
டில்ஷான் மதுசங்க | Run Out | 07 | 03 | 0 | 1 | |
வொக்கார் சலாம்கெஹலி | 05 | 05 | 0 | 0 | ||
உதிரிகள் | 15 | |||||
ஓவர் 20 | விக்கெட் 10 | மொத்தம் | 150 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
இசுரு உதான | 04 | 00 | 27 | 01 |
கார்லோஸ் ப்ராத்வைட் | 04 | 00 | 18 | 04 |
சாமிக்க கருணாரட்டன | 02 | 00 | 39 | 00 |
பேபியன் அலன் | 04 | 00 | 22 | 01 |
வனிந்து ஹஸரங்க | 04 | 00 | 21 | 02 |
கமிண்டு மென்டிஸ் | 01 | 00 | 13 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | பிடி – வொக்கார் சலாம்கெஹலி | வொக்கார் சலாம்கெஹலி | 15 | 20 | 02 | 0 |
அன்றே பிளட்சர் | டுனித் வெல்லாளகே | 35 | 22 | 4 | 2 | |
கமிண்டு மென்டிஸ் | பிடி – நுவான் பிரதீப் | ஜேம்ஸ் புல்லர் | 11 | 11 | 20 | 0 |
அஷேன் பண்டாரா | பிடி – வொக்கார் சலாம்கெஹலி | ஜேம்ஸ் புல்லர் | 25 | 24 | 2 | 0 |
கார்லோஸ் ப்ராத்வைட் | L.B.W | டுனித் வெல்லாளகே | 00 | 01 | 0 | 0 |
நஜிபுல்லா ஷர்டான் | Bowled | வொக்கார் சலாம்கெஹலி | 00 | 04 | 0 | 0 |
வனிந்து ஹஸரங்க | பிடி – வொக்கார் சலாம்கெஹலி | டில்ஷான் மதுசங்க | 07 | 05 | 0 | 0 |
பேபியன் அலன் | Bowled | டில்ஷான் மதுசங்க | 47 | 23 | 3 | 4 |
சாமிக்க கருணாரட்டன | 16 | 08 | 0 | 2 | ||
இசுரு உதான | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 193 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
திசர பெரேரா | 01 | 00 | 05 | 00 |
டுனித் வெல்லாளகே | 04 | 00 | 07 | 02 |
டில்ஷான் மதுசங்க | 03 | 00 | 41 | 02 |
வொக்கார் சலாம்கெஹலி | 04 | 00 | 40 | 02 |
விஜயகாந்த விஜயஸ்காந் | 04 | 00 | 26 | 00 |
ஜேம்ஸ் புல்லர் | 04 | 00 | 28 | 02 |