உலக கிண்ண இறுதியில் பிரான்ஸ்

பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

பிரான்ஸ் அணி அடுத்தடுத்த இரு உலக கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது இதுவே முதற் தடவை.

பிரான்ஸ் மற்றும் மோரோக்கா அணிகளுக்கிடையிலான போட்டி கடும் விறு விறுப்பாகவே நடைபெற்றது. மொரோக்கோ அணி இறுதி வரை கடுமையாக போராடியது. பிரான்ஸ் கோல் காப்பாளர் சில நிச்சயமான கோல்களை தடுத்தமையினால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. 61% பந்து கட்டுப்பாட்டை மொரோக்கோ அணியே வைத்திருந்தது.

தியோ ஹெர்னாண்டஸ் ஐந்தாவது நிமிடத்திலியே கோலை அடித்தமையினால் அணி முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை பிரான்ஸ் அணி தொடர்ந்து பேணி வந்தது அவர்களுக்கு வெற்றி பெற இலகுவாக அமைந்தது. 73 ஆவது நிமிடத்தில் ரன்டோல் கோலோ முவானி அடித்த கோல் மூலமாக பிரான்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. அவர் மேலதிக வீரராக இருந்து மைதானத்துக்குள் வந்து 44 செக்கன்களில் கோலை அடித்தார்.

ஆர்ஜன்டீனா, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் உலக கிண்ண தொடரில் மூன்று தடவைகள் மட்டுமே சந்தித்துள்ளன. முதல் சுற்றுப் போட்டிகளில் 30 மற்றும் 78 ஆம் ஆண்டுகளில் ஆர்ஜன்டீனா அணி அணி வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணி கடந்த உலக கிண்ண தொடரில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஆராஜன்டீனா அணியினை வீட்டுக்கு அனுப்பியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version