சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது கலையகத்திலேயே நேற்றிரவு (14.12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் அவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் சிகிச்சைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.