செல்லப்பிராணியின் இறுதி சடங்கு!

ஒரு மனிதனுக்கு நடத்தப்படும் இறுதி சடங்கை போன்று தாம் வளர்த்த செல்ல பிராணியான நாய்க்கும் இறுதிச் சடங்கு செய்த சம்பவமொன்று காலியில் பதிவாகியுள்ளது.

காலி, உடுகம, கடகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்த விசேட இறுதி சடங்கு இடம்பெற்றுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப அங்கத்தவர் ஒருவரைப்போலவே வீட்டில் இருந்ததாகவும், தாங்கள் பேசுவதை நன்கு புரிந்துகொள்ளும் எனவும் வீட்டிலுள்ளவர்கள் வேலைக்கு சென்று திரும்பும் வரையில் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பாசமுள்ள நாய் எனவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தாரின் அன்பைப் பெற்று, குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்த அந்த நாய்க்கு இறுதிச் சடங்கு நடத்த தாம் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version