மீன்பிடி படகில் 200 கிலோ ஐஸ்!

200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற 2 மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகளில் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு படகுகளும் தெய்வேந்திர முனைக்கு அப்பால் கடலில் சென்று கொண்டிருந்தபோது கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version