ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலையுடன் தொடர்பு இருக்குமென பொலிஸ் சந்தேகம் எழுப்பியுள்ள பிரைன் தோமஸுக்கு வெளிநாடுகளுக்கு பயணிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதின்மன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இறந்தவரின் முழுமையான தொலைபேசி அழைப்பு விபரங்களை வழங்குமாறு மேலதிக நீதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டர், நேற்று(15.12) மதியமளவில் வீட்டிலிருந்து சென்றவர் மாலை வேளையில் பொரளை கனத்தையில் தாக்கப்பட்டு கழுத்து வயரினால் கட்டப்பட்டு, அவர் வாகன இருக்கையில் கட்டப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுவைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்தார்.
இறந்தவருக்கும், பிரைன் தோமஸுக்கும் நீண்ட நாட்கள் பண கொடுக்கல் வாங்கல் சிக்கல் நிலை காணப்படுகின்ற அதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பில் பிரைன் தோமஸை சந்திக்க செல்வதாக கூறி, சென்ற நிலையிலேயே கொலையாகியுள்ளார். இந்த நிலையில் பிரைன் தோமஸிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முழுமையான விபரங்கள் கீழுள்ள இணைப்பில்