பாடசாலை பைகளை பரிசோதிப்பது வெற்றியளிக்காது!

போதைப்பொருள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுப்பதாகக் கூறி, பிள்ளைகளின் பாடசாலைப் பைகளை பரிசோதிக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களை கோருவது பிள்ளைகளின் தனியுரிமைக்குக் கேடு விளைவிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அது மிகவும் வெற்றிகரமான முறையாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளை பள்ளிகளுக்குள் வரவழைத்து குழந்தைகளின் பைகளை சோதனை செய்வது பள்ளி மாணவர்களை துன்புறுத்தும் ஒரு செயற்பாடாகிறது எனவும், இதனால் இந்த பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் அனைத்து மாணவர்களையும் இலக்காகக் கொண்ததாக அமைந்தாலும், அனைத்து பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் பயன்படுத்தாததால், இது மாணவர்கள் மத்தியில் ஒரு ஒடுக்குமுறையை ஏற்படுத்துகிறது.

எனவே மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கல்விச் சீர்திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதே போல் மாணவர்கள் ஒடுக்குமுறையற்ற கல்வியைப் பெற கல்விச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று, எரிபொருள் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், சுமார் மூன்று ஆண்டுகளாக அவ்வப்போது பாடசாலைகள் மூடப்படுவதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த செயற்பாடு மாணவர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version