ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல குறுக்கு வீதி பகுதியில் நேற்று (டிசம்பர் 18) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரை பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உணவுக் கடை ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் கடைக்குள் இருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.