வவுனியோ கோவில்குளம் பகுதியில் இளைஞர் ரவுடி குழு ஒன்று மக்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றுளளது. பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறித்த இடத்துக்கு சென்று குறித்த ரவுடி குழுவை துரத்தியடித்துள்ளார்.
இன்று அதிகாலை 12.30 அளவில் இந்த சமப்வம் நடைபெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். வீதியால் சென்ற மக்களை தாக்கி காயப்படுத்தியதோடு, வீடுகள் சிலவற்றையும் சேதபப்டுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வாள் , கோடரி போன்ற ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர். அவர்கள் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்லும்போது குறித்த ரவுடி கும்பல் தப்பியோடியுள்ளது. அவர்களை மடக்கி பிடிக்க திலீபன் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் முயற்சித்த போதும் குறித்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நால்வர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்
“குறித்த சம்பவம் தொடர்பாக இரவு 12 மணியளவில் எமக்கு தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததையடுத்து, பொலிசாருக்கும் தகவலை வழங்கிவிட்டு, குறித்த இடத்திற்கு நேரில் சென்றோம்.
வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களை பொலிசாருக்கு வழங்கியதையடுத்து, அவர்களை தேடும் பணியை ஆரம்பித்தனர். குறித்த நபர்கள் அனைவரும் வீதியோரம் அமர்ந்து போதைவஸ்து பாவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் அப்பகுதி மக்களுக்கு இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் உறுதியளித்து, கோவில்குளத்திற்கான பொலிஸ் பிரிவை வவுனியா நகர பொலிசிற்கு மாற்றித்தருவதாகவும் தெரிவித்தோம்.
செய்தியில் பதிவிடமுடியாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவையனைத்தும் பிரதி பொலிஸ்மா அவர்களின் கவனத்திற்கு உடன் கொண்டுவரப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.”
விரைவாக செயற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மக்களை பாதுகாத்த அதேவேளை, உரிய நடவடிக்கைகளையும் வேகமாக எடுத்துள்ளமை பாராட்டுதலுக்கு உரிய விடயமாகவும்.
வவுனியாவில் வாள் வெட்டு கலாச்சராம், போதைவஸ்து பாவனை அதிகரித்து வரும் நிலையில் இவாறான செயற்பாடுகளை உரிய தரப்புகளும், பொலிசாரும் அதிக கவனம் செலுத்தி இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.